கலெக்டர் ஆஃபீஸில் குழந்தைகள் காப்பகம்
கலெக்டர் ஆஃபீஸில் குழந்தைகள் காப்பகம்
கலெக்டர் ஆஃபீஸில் குழந்தைகள் காப்பகம்
ADDED : ஆக 16, 2011 04:09 AM
சேலம் :சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெண் ஊழியர்களின் நலன் கருதி குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் இயங்கி வருகின்றன.
இங்கு பணியாற்றும், இளம்தாய்மார்களின் நலன் கருதி, குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைக்க வேண்டும், என சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சமூக நலத்துறை செயலருக்கு அனுப்பி வைத்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. அதுபோன்று, சேலம் கலெக்டர் அலுவலகத்திலும், குழந்தைகள் காப்பகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


