/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சுமைப்பணி தொழிலாளர்வேலை நீக்கம் கண்டித்துதிருச்சியில் ஆர்ப்பாட்டம்சுமைப்பணி தொழிலாளர்வேலை நீக்கம் கண்டித்துதிருச்சியில் ஆர்ப்பாட்டம்
சுமைப்பணி தொழிலாளர்வேலை நீக்கம் கண்டித்துதிருச்சியில் ஆர்ப்பாட்டம்
சுமைப்பணி தொழிலாளர்வேலை நீக்கம் கண்டித்துதிருச்சியில் ஆர்ப்பாட்டம்
சுமைப்பணி தொழிலாளர்வேலை நீக்கம் கண்டித்துதிருச்சியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 03, 2011 12:00 AM
திருச்சி: தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை நீக்கம்
செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யூ., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி, மதுரை சாலையில் ஏராளமான பிளைவுட் நிறுவனங்கள் உள்ளன. இந்த
நிறுவனங்களை நம்பி 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்
பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விஜயா, கணேஷ், சந்தியா ஆகிய பிளைவுட்
கம்பெனிகளில் பணியாற்றி வந்த 90க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்
திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.ஏற்கனவே, பணியாற்றி வந்த சுமை
தூக்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு, பீகார்
மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதைக் கண்டித்து
இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில், திருச்சி கலெக்டர்
அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏற்கனவே, பணியாற்றிய
தொழிலாளர்களை விட்டுவிட்டு பீகார் மாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதை
எதிர்த்தும், சட்டக்கூலி, பி.எஃப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளை
அமல்படுத்தக் கோரியும், தொடர்ச்சியாக தொழிலாளர் சட்டங்களை மீறும்
முதலாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம்
எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ராஜா தலைமை
வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சுமைப்பணி தொழிலாளர் சங்க
நிர்வாகிகள் அன்பழகன், பழனிவேல், சண்முகம், உள்பட பலர் பங்கேற்றனர்.