Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்காக கிராமம் தோறும் தகவல் கணக்கெடுப்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்காக கிராமம் தோறும் தகவல் கணக்கெடுப்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்காக கிராமம் தோறும் தகவல் கணக்கெடுப்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்காக கிராமம் தோறும் தகவல் கணக்கெடுப்பு

ADDED : ஜூலை 27, 2011 10:29 PM


Google News

விருதுநகர் : வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்த உள்ள பத்து மாவட்ட கிராமங்களில், அடிப்படை தகவல் குறித்து கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்ட கிராமங்களில் அடிப்படை தகவல் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை, ஆதிதிராவிட பழங்குடியினத்தவர், மாற்றுத்திறனாளிகள், வீடுகளின் வகைகள், வசிக்கும் குடும்பங்கள், நஞ்சை, புஞ்சை, மேய்ச்சல் நிலம், அரசு புறம்போக்கு, வன நிலம் குறித்து கணக்கு எடுக்கப்பட உள்ளன.



மேலும் ,கிராமத்தில் உள்ள முக்கிய தொழில், சிறு தொழில் விபரங்கள்,அரசு நிறுவனங்கள் என பயன்பாட்டில் உள்ள கட்டடம், தொண்டு நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், நுண் நிதி கடன் நிறுவனங்கள், செயல்பாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், இல்லாதவை, அதற்கான காரணம், உறுப்பினர்கள் விபரம், கடன் பெற்றுள்ளனரா, கூட்டமைப்பில் உறுப்பினரா, தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, விருது பெற்றுள்ளதா போன்ற விபரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. இந்த அடிப்படை தகவல்களின் படியே கிராமங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பணிகளை மக்கள் கற்றல் மையங்களை சேர்ந்த சமூக வல்லுனர்கள் செய்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us