புதிதாக 28 மாணவர் விடுதிகள்: அமைச்சர் அறிவிப்பு
புதிதாக 28 மாணவர் விடுதிகள்: அமைச்சர் அறிவிப்பு
புதிதாக 28 மாணவர் விடுதிகள்: அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஆக 24, 2011 12:07 AM
சென்னை : 'பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய மாணவியருக்கு, மூன்று பள்ளி விடுதிகளும் என, 28 விடுதிகள் 4.28 கோடி ரூபாய் செலவில், இந்த ஆண்டு புதிதாக திறக்கப்படும்' என்று, அமைச்சர் முகமது ஜான் அறிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் முகமது ஜான் வெளியிட்ட அறிவிப்புகள்:
* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில், கூடுதலாக 10 சதவீத மாணவர்கள் சேர்க்க முடிவு.
* இந்த வகுப்பினருக்கு, 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின மாணவியருக்கு, மூன்று பள்ளி விடுதிகளும் என, மொத்தம் 28 விடுதிகள்.
* 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறும், மாணவ மாணவியருக்கு, தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகையாக, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் என்பது முறையே, 10 ஆயிரம், 7,000 மற்றும் 5,000 ரூபாயாக உயர்த்த முடிவு.
கள்ளர் சீரமைப்புப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் இத்தொகை உண்டு.
* கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில், 95 சதவீதத்துக்கு அதிகமாக மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை, நற்சான்றிதழ்.
* கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில், 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, சரண் செய்து, 51 தமிழாசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் அளிக்கப்படும்.
* உணவு மானியம், 450 ரூபாயில் இருந்து 650 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* பொதுப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் தொகை, 3,000 ரூபாயில் இருந்து 6,000 ஆகவும், 2,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் ஆகவும், 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் அறிவித்தார்.