/உள்ளூர் செய்திகள்/சேலம்/பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில்புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில்புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்
பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில்புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்
பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில்புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்
பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில்புறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்
ADDED : செப் 22, 2011 01:54 AM
சேலம்: சேலம் கிழக்கு மாவட்டப் பகுதியில் உள்ள பேரூராட்சிகளுக்கு,
வீரபாண்டி எம்.எல்.ஏ., செல்வம் அளித்த பட்டியலில் உள்ள வேட்பாளர்கள்
அறிவிக்காததால், கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.அ.தி.மு.க.,வில், சேலம்
மாநகர் மாவட்டம், கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என, மூன்றாக
பிரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன்,
முதல்வர் ஜெயலலிதா ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி, அதற்கென மாவட்ட
செயலாளர்களை நியமித்தார்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில், மாநகர் மாவட்டத்தை தவிர்த்து, கிழக்கு,
மேற்கு என்றிருந்தது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக மாறியது. அதன் மாவட்ட
செயலாளராக, உள்ளூர் மந்திரியான இடைப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகளில், அ.தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி வேட்பாளர் அறிவிப்பை பொறுத்தமட்டில், முதல்வர்
நேரடியாக கேட்டறிந்து, வேட்பாளர்களை அறிவித்தார். பேரூராட்சிகளை
பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் வழங்கும் பட்டியலின் அடிப்படையிலே
வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வான
செல்வம், தன் ஆதரவாளர்கள் பட்டியலை, உள்ளூர் மந்திரியிடம் கொடுத்து,
பேரூராட்சி வேட்பாளர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தார்.
அதில், மல்லூர்,
ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில், சேலம்
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்பட, 10க்கும் மேற்பட்டோரை
எம்.எல்.ஏ., பரிந்துரை செய்திருந்தார். ஆனால், பட்டியல் வெளியீட்டில்,
சிலர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள் இடம்
பெறாததால், எம்.எல்.ஏ., தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.இது குறித்து
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:பேரூராட்சி வேட்பாளர் பட்டியலில், எம்.எல்.ஏ.,
செல்வம் ஆதரவாளர்களில், பனமரத்துப்பட்டியில் மட்டுமே சீட்
கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்பட்டியில், ஒன்றிய செயலாளர் மாணிக்கத்துக்கு
கிடைக்கும் என்றிருந்தோம். ஆனால், அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
மந்திரி தன் இஷ்டப்படி பட்டியலில், 'டிக்' போட்டு தலைமைக்கு
அனுப்பியுள்ளார். அந்த பட்டியலை முதல்வரும் வெளியிட்டுள்ளார். தற்போது
அறிவித்துள்ள வேட்பாளர்கள், அந்த பேரூராட்சிகளில் வெற்றி பெறுவது கடினம்.
இது குறித்து தலைமைக்கு புகார் தெரிவிக்க உள்ளோம்.இவ்வாறு கூறினர்.