/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைதுகத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
ADDED : செப் 18, 2011 01:26 AM
கிருஷ்ணகிரி: பர்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் அருண் (21).
இவர் நேற்று முன்தினம் மாலை பர்கூர்-ஜெகதேவி சாலையில் எம்.ஜி.ஆர்., நகர் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் உள்ள பணத்தை தருமாறு அருணிடம் கேட்டுள்ளார். அருண் 300 ரூபாயை கொடுத்துவிட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் தப்பி ஓட முயற்சித்த அந்த வாலிபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சாரணையில், பிடிபட்ட வாலிபர் காவேரிப்பட்டணம் அடுத்த நரிமேடு போல்பாறை பகுதியை சேர்ந்த சக்தி (21) என்பதும் அவர் பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.


