/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாகடையம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
கடையம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
கடையம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
கடையம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED : செப் 03, 2011 02:39 AM
ஆழ்வார்குறிச்சி:கடையம் உடையார் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி
விழா 3 நாட்கள் கோலாகலமாக நடந்தது.கீழக்கடையத்தில் சேர்வைக்காரன்பட்டிக்கு
செல்லும் வழியில் உடையார் பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த
31ம் தேதி காலை காப்பு கட்டுதல் வைபவத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா
துவங்கியது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயில் யு.சி.சி.நண்பர்கள்
மற்றும் அன்பு நண்பர்கள் சார்பில் பத்தரை அடி உயரத்தில் விநாயகர் சிலை
அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.விநாயகர் சதுர்த்தி நாளன்று காலை 7
மணிக்கு பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து உடையார்
பிள்ளையாருக்கு அனுக்ஞை, சங்கல்பம், கும்ப பூஜை, 108 சங்கு பூஜை மற்றும்
மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
பின்னர் உடையார்
விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம், கும்பாபிஷேகம்,
தீபாராதனை நடந்தது.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கோயிலை சுற்றி
அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும்
நடந்தது. நேற்றுகாலை சிறப்பு தீபாராதனையும், விநாயகர் சிலை மேளதாளங்களுடன்
ஊர்வலமாக கீழக்கடையம், மெயின்ரோடு, பத்திர பதிவாளர் அலுவலகம் ரோடு வழியாக
எடுத்துவரப்பட்டு பின்னர் பத்திரகாளியம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தில்
விசர்ஜனம் செய்யப்பட்டது.யு.சி.சி.நண்பர்கள் ஒரே வகையான சீருடை அணிந்து
விழா வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். உடையார் விநாயகர் கோயில் 3
நாட்களும் கோலாகலமாக காணப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி
மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை கீழக்கடையம் யு.சி.சி. நண்பர்கள் மற்றும் அன்பு
நண்பர்கள் செய்திருந்தனர்.
ஆழ்வார்குறிச்சி சர்க்கரை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
கோலாகலமாக நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள்
நடந்தது. இங்கு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு
நடந்தது. விநாயகர் சதுர்த்தி இரவன்று மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலை
ஆழ்வார்குறிச்சி மெயின்ரோடு, சிவசைலம் மெயின்ரோடு, கீழக்கிராமம் உட்பட நகர்
முழுவதும் ஊர்வலமாக வந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை
விசர்ஜனம் செய்யப்பட்டது.