Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு புதுக்கோட்டை அருகே பரபரப்பு

காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு புதுக்கோட்டை அருகே பரபரப்பு

காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு புதுக்கோட்டை அருகே பரபரப்பு

காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு புதுக்கோட்டை அருகே பரபரப்பு

ADDED : செப் 01, 2011 11:37 PM


Google News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உடல் முழுவதும் பலத்த காயத்துடன் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் நேற்றுக்காலை அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை அடுத்த கடையக்குடியில் நேற்றுக்காலை ஒருவித துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள சுடுகாட்டுக்குச்சென்று பார்த்துள்ளனர். அங்கு புதர் பகுதிக்கள் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து அரிமளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின் விசாரணையை துவக்கினர். இதில் இறந்த வாலிபர் கடையக்குடியைச் சேர்ந்த சேதுகோனார் மகன் செல்வன்(24) என்பது தெரியவந்தது. குடிபழக்கம் உடைய இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு புதர் பகுதிக்குள் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றுக்காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us