Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரித்த பிரான்ஸ்; ஹமாசுக்கு தோல்வி என்கிறார் மேக்ரான்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரித்த பிரான்ஸ்; ஹமாசுக்கு தோல்வி என்கிறார் மேக்ரான்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரித்த பிரான்ஸ்; ஹமாசுக்கு தோல்வி என்கிறார் மேக்ரான்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரித்த பிரான்ஸ்; ஹமாசுக்கு தோல்வி என்கிறார் மேக்ரான்

ADDED : செப் 23, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது ஹமாஸ் இயக்கத்துக்கு கிடைத்த பெரும் தோல்வி என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

நியுயார்க்கில் நடைபெறும் ஐநா சபையின் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக பிரான்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உச்சி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியதாவது;

இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் உறுதிபாட்டின்படி பாலஸ்தீன அரசை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இது ஹமாசுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி. இஸ்ரேல் அமைதியாக வாழ இதுதான் ஒரே தீர்வு.

இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டியது அவசியம். பாலஸ்தீனத்தை அங்கீரிப்பதால் இஸ்ரேல் மக்களின் உரிமைகள் பறிக்கப்படாது.

இருநாடுகள் இடையேயான அமைதியான தீர்வையும், அதற்கான முயற்சிகளையும் பாலஸ்தீனம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீரித்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு எனது நன்றி. இவ்வாறு மேக்ரான் பேசினார்.

அதே வேளையில், பாலஸ்தீனத்துக்கான ஆதரவை அறிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு ஒரு வேடிக்கையானது, ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us