ADDED : செப் 01, 2011 09:06 PM
தேவகோட்டை : தேவகோட்டை வந்த ராணுவ வீரர் ஏணியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்தவர் ராணுவ வீரர் அருள்சாமி, 41. ஜம்மு காஷ்மீரில் குப்புவாடா என்ற இடத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். விடுமுறைக்கு தேவகோட்டை வந்தார். ஆக., 25ல் உறவினர் ராயர் வீட்டிற்கு சென்றார். அங்கு மின்விளக்கு பழுதானது. இதை சரிசெய்ய, ஏணியில் ஏறியபோது தவறி விழுந்தார். காயமடைந்த அவர், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில், சிகிச்சை பெற்றார். நேற்று காலை 4 மணிக்கு, பலனின்றி இறந்தார். அவரது உடல் நேற்று மாலை போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.