/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெடி மருந்து வெடித்து 3 பேர் பலத்த காயம்வெடி மருந்து வெடித்து 3 பேர் பலத்த காயம்
வெடி மருந்து வெடித்து 3 பேர் பலத்த காயம்
வெடி மருந்து வெடித்து 3 பேர் பலத்த காயம்
வெடி மருந்து வெடித்து 3 பேர் பலத்த காயம்
ADDED : ஆக 27, 2011 11:56 PM
ஓசூர்: கெலமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து மூவர் படுகாயம் அடைந்ததாக ஏற்பட்ட பீதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கெலமங்கலம் அடுத்த பைரமங்கலத்தை சேர்ந்தவர் ரவி (22). அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (20). அதேபகுதியை சேந்தவர் ராஜப்பா. இவர்கள் மூவரும் நேற்று ஓசூர் தனியார் மருத்துமனையில் முகம், கை மற்றும் கால்களில் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பைரமங்கலம் வனப்பகுதியில் கையில் வெடிமருந்து எடுத்து சென்றதாகவும், அப்போது பீடி நெருப்பு பட்டு வெடிமருந்து வெடித்து மூவரும் முகம், கை மற்றும் கால்களில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் எதற்காக வனப்பகுதியில் வெடிமருந்து எடுத்து சென்றார்கள், வெடிமருந்து வெடித்துதான் காயம் அடைந்தார்களா? அல்லது வேறு ஏதாவது சம்பவங்களில் காயம் அடைந்தார்களா? என கெலமங்கலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


