Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பார்த்தீனியம் களை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பார்த்தீனியம் களை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பார்த்தீனியம் களை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பார்த்தீனியம் களை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : ஆக 26, 2011 12:48 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை சார்பில், பார்த்தீனியம் களை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் பேசியதாவது:மனிதர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய பார்த்தீனியம் களை செடியினை அழிப்பது குறித்தான விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். பார்த்தீனியம் களை செடி மனிதர்களின் உடம்பில் படும்போது தோல் ஒவ்வாமைக்கும், செடியின் விதைகளில் இருந்து வெளிவரும் மகரந்ததூளை சுவாசிக்கும் போது ஆஸ்துமா, சரும நோய், தொழு நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களையும் ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது. பார்த்தீனியம் களைகள் வளர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் 10 டீபால் 2 மில்லி சேர்த்து நன்றாக கரைத்து களைகளில் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி மருந்தான 24-னு சோடியம் உப்பு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் 10 அம்மோனியம் சல்பேட் உரம் 20 கிராம் 10 சோப்பு கரைசல் 2 மில்லி சேர்த்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். மேலும் கிளைப்போசேட் மருத்தினை லிட்டருக்கு 15 மில்லி 10 அம்மோனியம் சல்பேட் 20 கிராம் 10 சோப்பு கரைசல் 2 மில்லி சேர்த்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். பயிர் செய்யாத நேரங்களில் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருத்தினை (எக்டருக்கு 2.5 கிலோ) தெளித்து களைகளை முளைக்கும் முன்பாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அட்ரசினின் தெளித்த வயலில் 60 நாட்களளுக்கு பின்பு வேறு விவசாய பயிர்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பார்த்தீனியம் களைகளை எப்படி அழிப்பது? என்ற செயல் முறை விளக்கம் விவசயிகள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது. பேரணியில் விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்தினியம் செடிகளை அழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கோஷமாக எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். இந்த பேரணி புது பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், பி.ஆர்.ஓ., கண்ணதாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us