Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசின் 100 நாள் சாதனை: அ.தி.மு.க., பிரசாரம்

அரசின் 100 நாள் சாதனை: அ.தி.மு.க., பிரசாரம்

அரசின் 100 நாள் சாதனை: அ.தி.மு.க., பிரசாரம்

அரசின் 100 நாள் சாதனை: அ.தி.மு.க., பிரசாரம்

ADDED : ஆக 26, 2011 12:15 AM


Google News

விழுப்புரம் : முதல்வர் ஜெ., தலைமையிலான 100 நாள் சாதனைகளை விளக்கி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருச்செங்கோடு நகர அ.தி. மு.க., இளைஞரணி செயலாளராக இருப்பவர் வடிவேலு. இவர் முதல்வர் ஜெ., அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கி சைக்கிளில் பிரசாரம் செய்து வருகிறார். விழுப்புரம் வந்த அவரை சிறுபான்மை பிரிவு ஜான்சன், ஜெ., பேரவை கண்ணன், கலுவு வரவேற்றனர். செஞ்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுரேஷ் பாபு, கவுன்சிலர்கள் டைட்டஸ், சேகர், நிர்வாகிகள் அஜீஸ், சரவணன், விஜயமணி, உமாநாத், கமலக்கண்ணன், சீனுவாசன், அறிவழகன், ரவி கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் சீனுவாசன், எம். ஜி.ஆர்., மன்றம் குபேந்திரன், கவுன்சிலர்கள் குட்டி, பால்ராஜ், கோபி கலந்து கொண்டனர். கண்டாச்சிபுரத்தில் அ.தி.மு.க., கிளை செயலாளர் சுப்ரமணி தலைமையில் இனிப்பு வழங்கினர். மடவிளாகம் கிளை செயலாளர் முனியநாதன், ஒன்றிய இளைஞர் பாசறை துணை செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டிவனம் காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அப்பாஸ் மந்திரி, ராஜேந்திரன், பாலச்சந்திரன், புரு÷ஷாத்தமன், வழக்கறிஞர் சீனுவாசன் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கேண்டீன் ரவி தலைமையில் செஞ்சி பஸ் நிறுத்தத்தில் இனிப்பு வழங்கினர்.மாவட்ட மீனவரணி செல்வம், நகர இளைஞரணி நந்தா, எம்.ஜி.ஆர்., மன்றம் ராஜாமணி கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். நகர செயலாளர் கேசவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர் மணி, தொகுதி செயலாளர் சேகர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள ராதாபுரம், முண்டியம்பாக் கம், கஞ்சனூர், நேமூர், முட்டத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர் வேலு தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். ஒன்றிய அவைத் தலை வர் செல்வராஜ், நகர செயலாளர் லோகையன், பொதுக் குழு உறுப்பினர் குமாரசாமி, முகமது சுலைமான் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us