UPDATED : ஆக 24, 2011 09:42 AM
ADDED : ஆக 24, 2011 09:30 AM
புதுடில்லி: ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதா கோரி, கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, டில்லி ராம்லீலா மைதானத்திற்கு சென்ற பா.ஜ., எம்.பி., வருண், அங்கு அன்னா ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார்.
தான் கட்சி சார்பில் அங்கு வரவில்லை என்றும், ஒரு சராசரி இந்தியனாக இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.