கள்ளக்காதலருடன் வந்த மனைவி கொலை : கணவர் போலீசில் சரண்
கள்ளக்காதலருடன் வந்த மனைவி கொலை : கணவர் போலீசில் சரண்
கள்ளக்காதலருடன் வந்த மனைவி கொலை : கணவர் போலீசில் சரண்
ADDED : ஆக 21, 2011 11:52 PM
கீழக்கரை : ஏர்வாடி அருகே கள்ளக்காதலனுடன் வீட்டிற்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மீனவ தொழிலாளி முனியாண்டி, 25.
மனைவி நம்புச் செல்வி, 25. மூன்று குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்த முனியசாமி, 25 என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்தார். கணவர் பலமுறை கண்டித்தும் கண்டு கொள்ளாமல் இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற நம்புச்செல்வி நேற்று மாலை கள்ளக்காதலருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த முனியாண்டி அரிவாளால் வெட்டியதில் பலியானார். அரிவாளுடன் ஏர்வாடி போலீசில் முனியாண்டி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து வருகிறார்.


