Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் அதிரடி சஸ்பெண்ட்

சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் அதிரடி சஸ்பெண்ட்

சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் அதிரடி சஸ்பெண்ட்

சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் அதிரடி சஸ்பெண்ட்

ADDED : ஆக 19, 2011 11:31 PM


Google News
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் யூனியன் செல்லப்பன்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தினை உதவிக்கல்வி அலுவலர், தலைமையாசிரியர், கிராம கல்விக்குழு மற்றும் பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில், அமைப்பாளர் மற்றும் சமையலர் உதவியாளர் ஆகியோர் பணியில் இருந்தனர். நேற்று செல்லப்பன்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு 330 முட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 182 முட்டை வழங்கப்பட்டது. 148 மாணவ மாணவியருக்கு முட்டைகள் வழங்கப்பட வில்லை. உணவில் போதுமான காய்கறிகள் போடப்படவில்லை. பதிவேட்டில் கணக்குகள் பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளிக்கு தனியாகவும், உயர்நிலைப்பள்ளிக்கு தனியாகவும் எழுதி உணவுப் பொருள் எழுதி பராமரிக்கப்படவில்லை. உணவு பொருட்களிலும் குறைவு காணப்பட்டது. உணவுப்பொருட்கள் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் விற்று வந்ததும் தெரியவந்தது. சத்துணவு மையத்தில் உணவு அருந்தும் மாணவ மாணவியரை விசாரித்ததில் அமைப்பாளர் முட்டைகள் சரியாக வழங்குவதில்லை என்றும் சரியானபடி உணவு வழங்கப்படுவது இல்லை என்றும், மாணவ மாணவியரை அடித்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார் என தெரிவித்தனர். அதனால் நிர்வாக நலன் கருதி செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஜெயராமன் மற்றும் சமையல் உதவியாளர் இந்திராணி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us