/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எம்.எல்.ஏ., அன்பழகனிடம் 2வது நாளாக விசாரணைஎம்.எல்.ஏ., அன்பழகனிடம் 2வது நாளாக விசாரணை
எம்.எல்.ஏ., அன்பழகனிடம் 2வது நாளாக விசாரணை
எம்.எல்.ஏ., அன்பழகனிடம் 2வது நாளாக விசாரணை
எம்.எல்.ஏ., அன்பழகனிடம் 2வது நாளாக விசாரணை
ADDED : ஆக 14, 2011 10:18 PM
திருப்பூர் : இரண்டாவது நாளாக நேற்று, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான எம்.எல்.ஏ., அன்பழகனிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில் கைதான எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், இரு நாட்களுக்கு முன் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. நேற்று முன்தினம் ஆஜரான எம்.எல்.ஏ., அன்பழகனை போலீசார் ஒன்பது மணி நேரம் விசாரணை செய்தனர்; இரண்டாவது நாளான நேற்றும் அன்பழகன், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் காலை 8.00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரிடம் விசாரணை மேற்கொண்டார்; மாலை வரை விசாரணை நீடித்தது. மூன்றாவது நாளான இன்றும் போலீஸ் விசாரணைக்காக, எம்.எல்.ஏ., அன்பழகன் நேரில் ஆஜராக உள்ளார்.