தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
ADDED : ஆக 13, 2011 02:53 PM
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை அவரது வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி தலைமையில் 7 பேர் வக்கீல்கள் குழுவினர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினர்.