Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மேலிடத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் ரெட்டி பிரதர்ஸ்

மேலிடத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் ரெட்டி பிரதர்ஸ்

மேலிடத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் ரெட்டி பிரதர்ஸ்

மேலிடத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் ரெட்டி பிரதர்ஸ்

ADDED : ஆக 12, 2011 09:16 AM


Google News

பெங்களூரு: எடியூரப்பா அரசில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்த ரெட்டி பிரதர்ஸ், தற்போதைய கவுடா அமைச்சரவையில் சேர்க்கப்படாததால், மீண்டும் அமைச்சர் பதவியைப் பெற மேலிடத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசில், அரசை ஆட்டிப்படைக்கும், குறிப்பாக முதல்வர் எடியூரப்பாவை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருந்தவர்கள் ரெட்டி பிரதர்ஸ் என்றழைக்கப்படும், ஜனார்த்தன் ரெட்டி, மற்றும் கருணாகர் ரெட்டி. தற்போது இருவரும் சுரங்க மோசடி குறித்த லோக் ஆயுக்தா அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது சதானந்த கவுடா தலைமையிலான அரசில் இவர்களுக்கு அமைச்சரவை இடம் அளிக்கப்படவில்லை. இதனால் மாநில பா.ஜ.,வில் அவர்களுக்கு அவ்வளவாக மவுசு இல்லை. இதனால் அதிர்ந்துள்ள ரெட்டி பிரதர்ஸ், மீண்டும் அமைச்சர் பதவியை பெற டில்லி மேலிடத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்களின் சமாதானத்தை பா.ஜ., மேலிடம் ஏற்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us