பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை இடை நிற்றலை குறைக்க அதிரடி நடவடிக்கை
பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை இடை நிற்றலை குறைக்க அதிரடி நடவடிக்கை
பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை இடை நிற்றலை குறைக்க அதிரடி நடவடிக்கை
சென்னை : அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த 'ஜாக்பாட்' அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம், இலவச மதிய உணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள் உள்ளிட்ட, பல சலுகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் இலவச, 'லேப்-டாப்' கம்ப்யூட்டர் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு 'ஜாக்பாட்' அறிவிப்பை, தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் வெளியிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்துவதைத் தடுக்கவும், அதன் சதவீதத்தைக் குறைக்கவும், பத்து மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இத்தொகை ஒரே ஒரு முறை வழங்கப்பட்டு, அது பொதுத்துறை நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, பள்ளிப்படிப்பை முடிக்கும் போது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 394 கோடியே நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கீட்டில், 24 லட்சத்து 94 ஆயிரத்து 649 மாணவர்கள் பயன்பெறுவர்.