தனியார் துறைமுகங்களின் செயல்பாடுஅமைச்சர் பழனிச்சாமி ரகசிய ஆலோசனை
தனியார் துறைமுகங்களின் செயல்பாடுஅமைச்சர் பழனிச்சாமி ரகசிய ஆலோசனை
தனியார் துறைமுகங்களின் செயல்பாடுஅமைச்சர் பழனிச்சாமி ரகசிய ஆலோசனை
ADDED : ஜூலை 31, 2011 11:09 PM
கடலூர்:கடலூரில் உள்ள, தனியார் துறைமுகங்களின் செயல்பாடுகள் குறித்து,
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு, ரகசிய ஆலோசனை நடத்தினார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,
நேற்று கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால்,
கடலூர் துறைமுகத்தை மேம்படுத்துதல், இயக்குதல், பராமரித்தல், வருவாயைப்
பங்கிடுதல் மற்றும் மாற்றுதல் அடிப்படையில், மேம்படுத்துவதற்கு தனியார்
முதலீட்டாளர்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.ஐந்தாண்டு
காலத்தில், இத்துறைமுகத்தில் செய்யப்பட வேண்டிய உத்தேச முதலீடு, 150 கோடி
ரூபாய். இதனடிப்படையில், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இத்துறைமுகத்தை
மேம்படுத்தும் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது.இதனை, அமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி, சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு அமைச்சர் சம்பத், சமூக
நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் தனியார் நிறுவனங்களான நாகார்ஜுனா, கெம்ப்ளாஸ்ட் சன்மார், குட்எர்த்
ஷிப் பில்டிங் பிரைவேட் லிட், பரங்கிப்பேட்டை ஐ.எல்., மற்றும் எப்.எஸ்.,
பவர் பிளாண்ட் ஆகிய நிறுவனங்களுடன், அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர்.