/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
உடுமலை : உடுமலை பாலப்பம்பட்டி ருத்ர வேணிமுத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி யோகா அரங்கில், பயிலக மாணவர் மனநல வளர்ச்சி மன்ற மூன்றாம் ஆண்டு துவக்க விழா, வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்து.
மாணவர் ஹரிதாஸ் வரவேற்றார். மன்ற தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சின்னச்சாமி, முதல்வர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். பழநி சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ரமேஷ்குமார் பேசினார். வாரியத்தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ. 1000, ரூ.750, ரூ.500 என துறை வாரியாக 18 பேருக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயிலக வேலை நாட்களிலும் கல்லூரிக்கு வருகை புரிந்த 28 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மெக்கானிக்கல் இரண்டாமாண்டு துறை மாணவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் ஜாபர் அலி செய்திருந்தார்.