ADDED : ஜூலை 28, 2011 10:08 PM
ஊட்டி : நீலகிரி மாவட்டம் கேத்தி கிராமத்தை சேர்ந்த அர்ஜூணன் என்பவரை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக மாநில அரசு
நியமித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இப்பதவி
வழங்கப்பட்டது முதல் முறையாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த படுகர்
இனத்தவரான அர்ஜூணன், கேத்தி பேரூராட்சி முன்னாள் தலைவராவார். தற்போது
ஊட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., செயலாளராக உள்ளார். இவருக்கு நீலகிரி
மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினரும், சிறு விவசாய சங்கத்தினரும்
வாழ்த்து தெரிவித்தனர்.


