திருமணமாகாத பயிற்சி பெண் போலீஸ் சடலம் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு
திருமணமாகாத பயிற்சி பெண் போலீஸ் சடலம் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு
திருமணமாகாத பயிற்சி பெண் போலீஸ் சடலம் கிணற்றிலிருந்து குழந்தையுடன் மீட்பு
ADDED : ஜூலை 26, 2011 01:40 AM
பெரம்பலூர் : திருமணமாகாத பயிற்சி பெண் போலீஸ் ஒருவர், குழந்தையுடன் கிணற்றில் பிணமாக கிடந்ததால், பெரம்பலூர் அருகே, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகள் சவுமியா, 20. இவர், உளுந்தூர்பேட்டை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த சில மாதங்களாக, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி போலீசாக பணியாற்றி வந்தார். திருமணமாகாத சவுமியா திடீரென கர்ப்பமானார். வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி சவுமியாவுக்கு, திருச்சி கே.எம்.சி., தனியார் மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து, சவுமியா பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அதன்பின், நேற்றுமுன்தினம் காலை முதல், சவுமியாவையும், குழந்தையையும் காணவில்லை என்று, அவரது தந்தை வெங்கடாசலம், பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சவுமியாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில், அதே கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது கிணற்றில், சவுமியா மற்றும் குழந்தையின் பிணங்கள் கிடந்தன. சுடிதாரின் துப்பட்டாவில், குழந்தையைக் கட்டியிருந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சவுமியா மற்றும் அவரது குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


