தென்கொரியா, மங்கோலியாவுக்கு ஜனாதிபதி பிரதிபா பயணம்
தென்கொரியா, மங்கோலியாவுக்கு ஜனாதிபதி பிரதிபா பயணம்
தென்கொரியா, மங்கோலியாவுக்கு ஜனாதிபதி பிரதிபா பயணம்
ADDED : ஜூலை 24, 2011 02:01 AM

புதுடில்லி : ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தென்கொரியா மற்றும் மங்கோலியாவில், இன்று முதல் ஏழு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இன்று தென்கொரியா புறப்பட்டு செல்லும் அவர், 26ம் தேதி வரை, அங்கு தங்குவார். 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மங்கோலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இப்பயணத்தின் போது, வடகொரிய அதிபருடன், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்த பயணத்தின் போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.