Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தெருக்கள் தோறும் புகார்பெட்டி : தி.மு.க., வேட்பாளர் உறுதி

தெருக்கள் தோறும் புகார்பெட்டி : தி.மு.க., வேட்பாளர் உறுதி

தெருக்கள் தோறும் புகார்பெட்டி : தி.மு.க., வேட்பாளர் உறுதி

தெருக்கள் தோறும் புகார்பெட்டி : தி.மு.க., வேட்பாளர் உறுதி

ADDED : அக் 04, 2011 12:53 AM


Google News

மதுரை : ''மதுரை மாநகராட்சி 80வது வார்டில் மக்களின் குறைகளை தீர்க்க, தெருக்கள் தோறும் புகார்பெட்டிகள் அமைத்து அன்றன்று, பிரச்னைகளை தீர்ப்பேன்,'' என, தி.மு.க., வேட்பாளர் மா.

சரவணபாண்டியன் உறுதி கூறினார்.

இவர் 18 ஆண்டுகளாக தி.மு.க., இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் கூறியதாவது: காக்காத்தோப்பு, தலைவிரிச்சான் சந்து, மேலப்பெருமாள்மேஸ்திரி வீதி பகுதிகளில் ரோடுகள் மோசமாக உள்ளன. அனைத்து ரோடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிக்கடி பழுதாகும் இடங்களில் 'பேவர் பிளாக் டைல்ஸ்' அமைக்கப்படும். கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது, சொந்த செலவில் லாரிகள் மூலம் வழங்கப்படும். முதியோர் விதவை பென்ஷன், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க உதவி செய்யப்படும். மாதந்தோறும் தெருக்களில் இலவச மருத்துவ முகாம், குறைதீர் முகாம் நடத்தப்படும். ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு, புத்தகங்களை ஐந்தாண்டுகளாக வழங்குகிறேன். அப்பணி தொடரும். இறுதிச் சடங்கிற்கு இலவச வேன் கொடுத்து, இல்லாதவர்களுக்கு முடிந்தளவு பணஉதவி செய்வேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசிப்பதால், இங்குள்ள நிறை, குறை அறிந்து, அதற்கேற்ப என்னால் செயல்படமுடியும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us