ADDED : செப் 30, 2011 11:06 PM
பந்தலூர் : பந்தலூர் வட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே நடந்த கோ-கோ இறுதி போட்டியில் பந்தலூர் புனித சேவியர் பள்ளி அணி வெற்றிபெற்றது.
பந்தலூர் வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் தேவாலா ஹோலிகுரோஸ் பள்ளியும்-பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அணியும் மோதின. அதில் 12:4 என்ற புள்ளிக்கணக்கில் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அணி வெற்றிப்பெற்றது. பந்தலூர் வட்ட அளவிலான தடகள போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். அதில் மூத்தோர் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று வர்ஷா என்ற மாணவி தனி நபர் பட்டத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியை உஷாராணி ஆகியோரையும் பள்ளி தாளாளர் ஜான்சிராணி, தலைமையாசிரியர் செலீன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.