PUBLISHED ON : செப் 30, 2011 12:00 AM
உலகின் நீளமான சரங்க ரயில் பாதை
ஜம்முவையும், ஸ்ரீநகரையும் இணைக்க ஜவகர் குகை உருவாக்கப்பட்டவுடன், பயண நேரம் பாதியாக குறைந்தது. இது சாலைப் போக்குவரத்தில் உருவாக்கப்பட்ட சுரங்கமாகும். இதனைப் போல, உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க பாதையின் நீளம் 57 கி.மீ., ஆகும். இந்த சுரங்கப்பாதையை கட்டி முடிக்க 12 ஆண்டுகள் ஆனது. இதை கட்டி முடிக்க 23 மில்லியன் டன் பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டதால், மலைகளைச் சுற்றிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. 2 ஆயிரத்து 600 பேர், ஆண்டுக்கு 310 வேலை நாட்கள் பணிபுரிந்து இந்த சுரங்க ரயில் பாதையை உருவாக்கி உள்ளனர். இந்த சுரங்க ரயில் பாதையில், ரயில்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் கூட செல்ல முடியும்.
தகவல் சுரங்கம்
இரண்டாவது சிவகாசி
இரண்டாவது சிவகாசி
தீபாவளி பட்டாசு வர்த்தகத்தில், சிவகாசி அதிக கவனம் செலுத்துவதால் தமிழகத்தில் குடியாத்தம் தீப்பெட்டித் தொழிலுக்கு முக்கியத்துவம் தருகிறது. வேலூருக்கும், வாணியம்பாடிக்கும் இடையில் குடியாத்தம் உள்ளது. சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழில்களோடு, தீப்பெட்டித் தொழிலும் உள்ளது. ஆனால் குடியாத்தத்தில் ஊரின் மொத்த மக்களும் குடிசைத் தொழிலாக, தீப்பெட்டித் தொழிலை செய்கின்றனர். குடியாத்தம் தீப்பெட்டித் தொழிலுக்குப் பருவ மழை பாதகமாக உள்ளது. இயந்திரமயமாகி விட்ட படியால், உற்பத்தியும், தொழில் வளமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த இயந்திரங்கள் சிறு தொழிற்சாலைகளுக்குப் பெரிய சவாலாக உள்ளன. இந்தியாவின் மொத்த தீப்பெட்டி தேவையில் 90 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பாகும். அதில் குடியாத்தத்தின் பங்கு கணிசமாகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலை பணிகளில், 90 சதவீதம் பேர் பெண்களே ஈடுபட்டு உள்ளனர்.