/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இனுங்கூருக்கு கூடுதல் டவுன் பஸ்: எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் கோரிக்கைஇனுங்கூருக்கு கூடுதல் டவுன் பஸ்: எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் கோரிக்கை
இனுங்கூருக்கு கூடுதல் டவுன் பஸ்: எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் கோரிக்கை
இனுங்கூருக்கு கூடுதல் டவுன் பஸ்: எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் கோரிக்கை
இனுங்கூருக்கு கூடுதல் டவுன் பஸ்: எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் கோரிக்கை
ADDED : செப் 24, 2011 01:00 AM
குளித்தலை: 'இனுங்கூருக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என
பகுதி மக்கள் எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரத்திடம் கோரிக்கை மனு
அளித்துள்ளனர்.மனுவில் உள்ளதாவது:குளித்தலை அருகே இனுங்கூரில் வட்டார ஆரம்ப
சுகாதார நிலையம், விதைப்பண்ணை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி
செயல்படுகிறது. இனுங்கூருக்கு காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும், மாலை 4
மணிக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் தனியார் மினி
பஸ் வசதி பெட்டவாய்த்தலையில் இருந்து இயக்கப்படுகிறது.
கிராமப்புறத்தில் இருந்து அரசு வட்டார மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி
பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் காலை நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றால்,
திரும்பி வருவதற்கு உடனடியாக பஸ் வசதி இல்லை. இதேப்போல், காலை நேரத்தில்
பஸ் வராத பட்சத்திலும், பஸ்சை தவறிவிட்டாலும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு
செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
இருந்தும், குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் இல்லாததால் மாணவர்கள் பெரிதும்
அவதிப்படுகின்றனர். இனுங்கூரில் இருந்து பங்களாபுதூர், ஈ.புதூர்,
காகம்பட்டி மற்றும் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத
நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக குளித்தலை சத்திரம் பஸ்
ஸ்டாண்ட்டில் இருந்து இனுங்கூருக்கு கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.