Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒரு மாணவரைத் தாக்கிய 20 பேர் : காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

ஒரு மாணவரைத் தாக்கிய 20 பேர் : காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

ஒரு மாணவரைத் தாக்கிய 20 பேர் : காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

ஒரு மாணவரைத் தாக்கிய 20 பேர் : காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

ADDED : செப் 20, 2011 10:55 PM


Google News
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில், பள்ளி மாணவரை 20 பேர் கொண்ட கும்பல், சினிமாவில் வருவது போன்று சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த தொரப்பு ஊராட்சித் தலைவர் பாஸ்கர். இவரது மகன் ராஜ்குமார், 17; காட்டுமன்னார்கோவில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து பஸ் ஏறுவதற்காக நண்பர்களுடன் பஸ் நிலையம் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 20 வாலிபர்கள், மாணவர் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மற்ற மாணவ, மாணவியர் அலறியடித்து ஓடினர். சற்று நேரத்தில், சினிமாவில் வருவது போன்று நடந்ததால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. மாணவரைத் தாக்கிய அனைவரும் மின்னல் வேகத்தில் தப்பினர். தகவலறிந்த ஊராட்சித்தலைவர் பாஸ்கர், மயக்க நிலையில் இருந்த மகனை, காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us