/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவாரத்தில் போக்குவரத்து நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவைதேவாரத்தில் போக்குவரத்து நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை
தேவாரத்தில் போக்குவரத்து நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை
தேவாரத்தில் போக்குவரத்து நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை
தேவாரத்தில் போக்குவரத்து நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை
ADDED : செப் 20, 2011 10:22 PM
தேவாரம்:தேவாரம் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவாரம் பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக
அலுவலகம், சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, தினசரி
மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு மெயின் பஜார் வழியாக செல்ல வேண்டும்.
ரோட்டின் இருபுறமும் முறையற்ற வாகன நிறுத்தத்தால் அடிக்கடி போக்குவரத்து
தடைபடுகிறது.இந்த ரோட்டில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாலையில், பள்ளி
விடும் நேரத்தில் குடிமகன்கள் ரோட்டை மறித்து நிற்கின்றனர். இதனால்
மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. டீக்கடை மற்றும்
ஓட்டல்காரர்கள் அடுப்புகளை ரோட்டோரமாக வைத்து ஆக்கிரமித்துள்ளனர். விறகு,
தென்னை மட்டை போன்றவற்றை ரோட்டில் போட்டு வைப்பதால் பிளாட்பாரங்களில் நடக்க
முடியவில்லை. மெயின் ரோட்டில் உள்ள இரண்டு நான்குமுக்கு பகுதியில்
நிற்பவர்களையும், வாகனங்களை முறையின்றி நிறுத்துபவர்கள் மீது போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.