அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை:தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேச்சு
அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை:தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேச்சு
அனைவருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை:தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேச்சு

சென்னை:''தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க, நிலம் கையகப்படுத்தும் முறையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில், அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது'' என, தொழில்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.'தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் 2025ம் ஆண்டை எதிர்நோக்கி' என்ற தலைப்பிலான, தொழில் நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
கூடுதல் தலைமைச் செயலர் சூசன் மேத்யூ வரவேற்றுப் பேசுகையில், 'முதல்வர் ஜெயலலிதா அறிவித்த,'விஷன் 2025 டாக்குமென்ட்' வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொழில்துறை அமைச்சர் வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது:
இதன் மூலம், தனியார் முதலீடு மேலும் அதிகரிக்கும். 'விஷன் 2025' திட்டத்தின் படி, தமிழகத்தில் எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தனியார் முதலீடு செய்ய விரும்பும் மாநிலமாக தமிழகம் மாறும்.


