Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு வசதியில்லாத அரப்படிதேவன்பட்டி

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு வசதியில்லாத அரப்படிதேவன்பட்டி

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு வசதியில்லாத அரப்படிதேவன்பட்டி

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு வசதியில்லாத அரப்படிதேவன்பட்டி

ADDED : செப் 16, 2011 11:22 PM


Google News

குன்னூர் ஊராட்சி அரப்படித்தேவன்பட்டியில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு இன்மையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வைகை ஆற்றுப்படுகையில் உள்ள இக்கிராமத்தில் இருந்துதான் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பல ஊர்களுக்கும் குடிநீர் பம்ப் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் விவசாயம் நடந்து வரும் இக்கிராமத்தில் குடிநீர் வினியோக குளறுபடியால் தட்டுப்பாடு நிலவுகிறது. துப்புரவு பணியாளர்கள் யாரும் பணியில் ஈடுபடாததால் கிராமத்தில் குப்பைகள், சாக்கடை கழிவுகள் ஆங்காங்கு கொட்டிக்கிடக்கின்றன. மழை நீர் வடிந்து செல்ல வாய்க்கால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தொற்றுநோய் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. இக்கிராமத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்கள் தங்கள் மனக்குமுறலை தெரிவித்தனர்.டி.சீதாலட்சுமி: ஆண்டு முழுவதும் இக்கிராமத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. மேல்நிலைத்தொட்டி மூலம் சப்ளை செய்யும் குடிநீரை குழாய்களில் பிடிக்க முடிவதில்லை. பள்ளம் தோண்டி தரையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் இருந்துதான் குடிநீர் பிடிக்க முடிகிறது. சாக்கடை நீரும் குடிநீரும் பல இடங்களில் கலந்து விடுகிறது. மழைக்காலங்களில் தொற்று நோய் பலருக்கும் எளிதில் பரவி விடுகிறது. தெருக்களில் மாதம் இருமுறை கூட சுத்தம் செய்ய வருவதில்லை. சுத்தம் செய்தாலும் குப்பைகளை அப்படியே போட்டு செல்கின்றனர்.ஜி.அழகுசுந்தரம்: கிராமத்தில் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ளது. கால்நடைக்கழிவுகளை அப்புறப்படுத்தி சேமிக்க போதுமான இட வசதி இல்லை. ரோட்டின் ஓரங்களில் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தகம் இல்லை. சுடுகாடு செல்ல சரியான பாதை வசதி இல்லை. இப்பகுதியை திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மந்தையம்மன் கோயில் அருகில் உள்ள பயன்பாடற்ற கிணற்றுக்கு மூடி இல்லை. குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.ஜெ.நாகஜோதி: கிராமத்தில் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடைகள் பழுதடைந்து விட்டன. கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. கழிவு நீரால் புழுக்கள், கொசுக்கள் தொல்லை அதிகம் உள்ளது. புதிய சாக்கடைகள் அமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகிக்கப்படும் மேல்நிலைத்தொட்டி சிதிலமடைந்துள்ளது. நீர் கசிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்க வேண்டும். அடிகுழாய்கள் ஏதும் இல்லை. மின்தடை ஏற்பட்டால் குடிநீர் கிடைப்பதில்லை. புதிய அடிகுழாய் அமைத்து தரைமட்டத்தொட்டி மூலம் நீர் வினியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகள் மாற்றப்படாததால் பல இடங்கள் இருளில் மூழ்கி விடுகிறது.



நமது சிறப்பு நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us