சவுதி அரேபியா சிறையில் இருந்த 87 இந்தியர்கள்விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சவுதி அரேபியா சிறையில் இருந்த 87 இந்தியர்கள்விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சவுதி அரேபியா சிறையில் இருந்த 87 இந்தியர்கள்விமானம் மூலம் சென்னை வந்தனர்.
ADDED : செப் 13, 2011 12:52 AM

சென்னை : சவுதி அரேபியா சிறையில் இருந்த, 87 இந்தியர்கள், விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, மும்பையில் வட மாநில பத்திரிகைகளில், சவுதி அரேபியா நாட்டிற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்தது. இதை நம்பி, ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, மும்பையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, ஒவ்வொருவரிடம் இருந்து 1, 2 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, 10, 15 பேர் கொண்ட குழுக்களாக சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால், அங்கு அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டது. கொத்தடிமைகளாகவும் வைக்கப்பட்டனர். இதற்கிடையில், அவர்களின் பாஸ்போர்ட் காலாவதியானது. இந்நிலையில், சவுதி அரேபியா அரசு, சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை கைது செய்தது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஐந்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் இருப்பவர்களை, அந்தந்த நாடுகள் மீட்டு அழைத்துச் சென்றன. அந்த வகையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 87 இந்தியர்கள் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று சென்னைக்கு வந்தனர். பின், அங்கிருந்து சென்ட்ரலுக்கு சென்று, ரயில்கள் மூலம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றனர்.