/உள்ளூர் செய்திகள்/தேனி/செல்வாக்கு தலைவர்கள் பட்டியல் தயாரிப்புசெல்வாக்கு தலைவர்கள் பட்டியல் தயாரிப்பு
செல்வாக்கு தலைவர்கள் பட்டியல் தயாரிப்பு
செல்வாக்கு தலைவர்கள் பட்டியல் தயாரிப்பு
செல்வாக்கு தலைவர்கள் பட்டியல் தயாரிப்பு
ADDED : செப் 08, 2011 10:46 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலுக்காக, ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்கு பெற்ற தலைவர்களின் பட்டியலை, உளவுப்பிரிவு போலீசார் தயாரித்து வருகின்றனர்.
ஊராட்சி தேர்தலில், தலைவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இருப்பினும் இவர்களின் செல்வாக்கு மூலமே, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஓட்டு கிடைக்கும். இதன் மூலம் ஒன்றிய தலைவர் பதவியை கட்சி சார்ந்தவர்கள் பிடிக்க முடியும். எனவே, ஊராட்சிகளில் தங்களுக்கு சாதகமான தலைவர்களை நிறுத்த அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் பட்டியலை உளவுப்பிரிவு போலீசார் தயாரித்து வருகின்றனர்.