கடலூர்:கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.நலவாரியத்தில் பதிவு செய்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு 1,000
ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நலவாரிய சலுகைகளை உடனடியாக வழங்க
வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ.,
சார்பில் கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர்
பாஸ்கரன் தலைமை தாங்கினார்.செயலர் கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர்
ஸ்ரீதர், மருதவாணன், புரு÷ஷாத்தமன், சுகுமாறன், குமார், கிருஷ்ணமூர்த்தி
கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர்.