ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்
ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்
ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்
ராமநாதபுரம் : உள்ளாட்சித் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், ஏலம் போகக் காத்திருக்கின்றனர், ஊராட்சித் தலைவர்கள்.
ஒரு ஊருக்கு, ஆறு முதல் ஏழு பேர் வரை போட்டியிடும் பட்சத்தில், ஊர் ஒற்றுமைக்காக, குலுக்கல் முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். சில ஊர்களில், ஏலத் தொகை யார் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஊராட்சித் தலைவர் பதவி கிடைக்கும். மற்றவர்கள் ஒதுங்கி விட வேண்டும் என்பது, ஊர்க் கட்டுப்பாடு. ஏலத்தொகையை வைத்து, கோவில் புனரமைப்புப் பணிகள், சமுதாயக் கூடம் கட்டுதல் போன்றவற்றை நிறைவேற்றுகின்றனர்.
தற்போது, 250 ஓட்டுகள் உள்ள வார்டுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வரை மறைமுகமாக விலை பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம், ஊராட்சிக்குக் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அதனால், இதை வைத்தே ஏலத்தொகை இருந்தது. தற்போது, அந்தத் திட்டம் முடங்கிய நிலையில், 100 நாள் வேலை திட்டத்தை முன்னிறுத்தி, ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.