Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் ஆங்கில வழி புத்தகம் இன்றி மாணவர்கள் அவதி

காரைக்காலில் ஆங்கில வழி புத்தகம் இன்றி மாணவர்கள் அவதி

காரைக்காலில் ஆங்கில வழி புத்தகம் இன்றி மாணவர்கள் அவதி

காரைக்காலில் ஆங்கில வழி புத்தகம் இன்றி மாணவர்கள் அவதி

ADDED : ஆக 25, 2011 01:58 AM


Google News

காரைக்கால் : காரைக்காலில் தமிழ் வழி சமச்சீர் புத்தங்கள் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.

ஆங்கில வழி புத்தங்கள் கிடைக்காததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழி புத்தகங்கள் மட்டும் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்படாததால் இதில் பயிலும் மாணவர்கள் புத்தகம் இன்றி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

ஆங்கில வழி புத்தகங்கள் அச்சிட்டு, புத்தக கார்ப்பரேஷனுக்கு வரவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி கிடையாது என்றாலும், கடந்த 3 மாதங்களாக பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 22ம் தேதி தந்தை பெரியார் பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சப் கலெக்டர் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் அனுப்பப்பட்டு கடலூரில் இருந்து பிளஸ் 2 புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. காரைக்காலில் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும், இதில் 3 பள்ளிகளுக்கு மட்டுமே ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us