/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கலாசாரம் வளர்ந்தால் சமூக விரோத செயல் மறையும் : வி.எச்.பி., தலைவர் வேதாந்தம் பேச்சுகலாசாரம் வளர்ந்தால் சமூக விரோத செயல் மறையும் : வி.எச்.பி., தலைவர் வேதாந்தம் பேச்சு
கலாசாரம் வளர்ந்தால் சமூக விரோத செயல் மறையும் : வி.எச்.பி., தலைவர் வேதாந்தம் பேச்சு
கலாசாரம் வளர்ந்தால் சமூக விரோத செயல் மறையும் : வி.எச்.பி., தலைவர் வேதாந்தம் பேச்சு
கலாசாரம் வளர்ந்தால் சமூக விரோத செயல் மறையும் : வி.எச்.பி., தலைவர் வேதாந்தம் பேச்சு
ADDED : ஆக 23, 2011 01:43 AM
திருப்பூர் : ''நம் நாட்டில் இந்து கலாசாரம் வளர்ந்தால், சமூக விரோத
செயல்கள் மறையும்,'' என வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம்
பேசினார். விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி நிறைவு விழா
பொதுக்கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் நாச்சிமுத்து
தலைமை வகித்தார்.
வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் பேசியதாவது: கிருஷ்ண ஜெயந்தி
என்பது ஊர்வலம் அல்ல; அது சுவாமி புறப்பாடு. இதற்கு, யார் அனுமதியும்
தேவையில்லை. ஆனால், இந்துக்களின் அடிப்படை உரிமையை கொண்டாட, போலீசாரிடம்
அனுமதி பெற வேண்டியுள்ளது. பகவத் கீதையை இந்திய தேசத்தின் தலைவர்களான
காந்தி, விவேகானந்தர் என அனைத்து தலைவர்களும் படித்தனர்; தர்மம்
காக்கப்பட்டது. பல ஆயிரம் பூஜாரிகளை, முன்னாள் முதல்வர் கருணாநிதி காக்க
வைத்தார். அவர்கள் சாபமிட்டனர். இன்று ஆட்சி இல்லை; எதிர்க்கட்சியாக கூட
அமர முடியவில்லை. தேசம் முழுவதும், 12 ஜோதிர்லிங்கங்கள், 54 சக்தி பீடங்கள்
என கோவில்களால் இணைக்கப்பட்டுள்ளது. திருவிழா கொண்டாடுவது மக்கள்
ஒற்றுமையை, சக்தியை வலுப்படுத்தும். அலட்சியப்போக்கை கைவிட்டு விட்டு,
மாற்றத்தை கொண்டு வர முன்வர வேண்டும். ஆடு, கோழிகளை பலியிடும் நாம், ஏன்
சிங்கம், புலிகளை பலியிடுவதில்லை. அதன் மீது பயம் உள்ளது. அதுபோல்
இந்துக்கள் ஆடு, மாடுகளாக இருந்தால் பலியிடுவர்; சிங்கங்களாக இருக்க
வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக, போராடும் குணத்துடன் இருந்தால் பயங்கரவாதம்
ஒழியும்.
இந்தியாவில் பயங்கரவாதம் வளர்கிறது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.
இதற்கு காரணம் நம்மிடையே அநீதியை எதிர்த்து போராடும் குணம், ஒற்றுமை
இல்லை. அமைதியான எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம். இந்த உண்மையை உணர்ந்தால்
ஒன்று சேர்த்து விடுவோம். புத்தியில் சிறந்தவர்கள் நாம். ஆனால் ஒற்றுமை
இல்லை. இந்து இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் போதும். சுதந்திரம் பெற்றும்,
பெரும்பான்மையானவர்களாக இருந்தும் இன்னும் அடிமையாகவே உள்ளோம். அரசியல்
சட்டமே நமக்கு விரோதமாக உள்ளது. இவ்வாறு, வேதாந்தம் பேசினார்.