ADDED : ஆக 19, 2011 06:17 PM
கரீம்கஞ்ச்(அசாம்): அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்துக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ராணுவ மேஜர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து குட்குட்டி மற்றும் ரடாபரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.