Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மீண்டும் நிதி நிறுவன மோசடி ஏமாந்தவர்கள் புகார் தரலாம்

மீண்டும் நிதி நிறுவன மோசடி ஏமாந்தவர்கள் புகார் தரலாம்

மீண்டும் நிதி நிறுவன மோசடி ஏமாந்தவர்கள் புகார் தரலாம்

மீண்டும் நிதி நிறுவன மோசடி ஏமாந்தவர்கள் புகார் தரலாம்

ADDED : ஆக 19, 2011 01:43 AM


Google News

சென்னை : எழும்பூர் 'மெட்ரோ குருயிஸ்' நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பணம் திரும்ப கிடைக்கப் பெறாதவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளரிடம் புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை எழும்பூரில் 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது மெட்ரோ குருயிஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம்.

இந்நிறுவனம் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, எழும்பூர் மாண்டியத் சாலை சீப்ரோஸ் சென்டர் மூன்றாவது மாடியில் இயங்கி வந்தது. இதன் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. இதன் தலைமை அதிகாரியாக எம்.எம்.சிங் என்பவரும், சென்னை கிளை தலைமை அதிகாரியாக குருபச்சன்லால் சோப்ராவும் இருந்தனர். இந்நிறுவனத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் சிரில் என்பவர் பணத்தை முதலீடு செய்துள்ளார். சொன்னபடி முதலீட்டாளருக்கு பணத்தை, நிதி நிறுவனம் திரும்ப வழங்கவில்லை என்று நிதி நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தார் மைக்கேல் சிரில். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நிறுவனம், முதலீட்டாளர்களிடம் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி புகார் தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us