Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூரில் 30ம் தேதி தினசரி சந்தை குத்தகை உரிமம் பொது ஏலம்

வள்ளியூரில் 30ம் தேதி தினசரி சந்தை குத்தகை உரிமம் பொது ஏலம்

வள்ளியூரில் 30ம் தேதி தினசரி சந்தை குத்தகை உரிமம் பொது ஏலம்

வள்ளியூரில் 30ம் தேதி தினசரி சந்தை குத்தகை உரிமம் பொது ஏலம்

ADDED : ஆக 15, 2011 01:30 AM


Google News

வள்ளியூர் : வள்ளியூர் டவுன் பஞ்.,சிற்குட்பட்ட தினசரி சந்தை குத்தகை உரிமத்தை பொது ஏலம் விட மறுக்கும் டவுன் பஞ்., உதவி இயக்குநரை கண்டித்து டவுன் பஞ்., தலைவர் அறிவித்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வரும் 30ம் தேதி தினசரி சந்தை குத்தகை உரிமத்தை பொது ஏலம் விடப்பட இருக்கிறது.வள்ளியூர் டவுன் பஞ்.,சிற்கு சொந்தமான தினசரி சந்தையில் கடைகளுக்கு குத்தகை உரிமம் கட்டணம் வசூல் செய்வதற்காக டவுன் பஞ்., நிர்வாகம் பொது ஏலம் விடும்.

அதன்படி மூன்றாண்டுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விட வேண்டும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் தினசரி சந்தையின் குத்தகை உரிமம் வசூலிக்கும் காலம் குத்தகைதாரருக்கு முடிவடைந்துவிட்டது.



இந்நிலையில் தினசரி சந்தையை பொது ஏலம் விட டவுன் பஞ்., நிர்வாகம் மறுத்து வந்துள்ளது. இதனை கண்டித்து டவுன் பஞ்., தலைவர் சங்கரநாராயணன் நாளை (16ம் தேதி) டவுன் பஞ்., அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக மாவட்ட கலெக்டருக்கு முனு கொடுத்துள்ளார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு வரும் 30ம் தேதி மாலை 3 மணிக்கு வள்ளியூர் டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி டவுன் பஞ்., செயல் அலுவலர் காளியப்பன் தினசரி சந்தை குத்தகை உரிமம் பொதுஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கும் டவுன் பஞ்.,தலைவர் சங்கரநாராயணன் கூறும்போது :-''என் மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு வரும் 30ம் தேதி வள்ளியூர் தினசரி சந்தையை பொதுஏலம் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு டவுன் பஞ்., செயல் அலுவலர் காளியப்பன் எனக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாளை (16ம் தேதி) நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us