/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொலை வழக்கில் தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்கொலை வழக்கில் தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்
கொலை வழக்கில் தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்
கொலை வழக்கில் தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்
கொலை வழக்கில் தேடப்படும் மில் அதிபர் சென்னையில் பதுங்கல்
ADDED : ஆக 11, 2011 11:44 PM
கோவை : கோவை, ஒண்டிபுதூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஓட,ஓட வெட்டிக் கொலை செய்த வழக்கில், தலைமறைவான உடுமலை மில் அதிபரை தனிப்படை போலீசார் சென்னையில் தேடுகின்றனர்.
திருச்சி,பொன்மலையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(43). திருச்சி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளி. போலீசாருக்கு இவர் தான் காட்டிக் கொடுத்தார் என சந்தேகமடைந்த ரவுடிகள் இவரை தீர்த்துக் கட்ட தேடி வந்தனர். தலைமறைவான சோமசுந்தரம் கோவை, சிங்காநல்லூர் கணபதிநகரில் ரியல் எஸ்டேட் உரிமையாளராக பதுங்கி இருந்தார். சமீபத்தில் இவரை சந்தித்த இவரது நண்பர் சிலோன் மோகன், கடனாக கொடுத்த 10 லட்சம் ரூபாயை கேட்டார். பணம் தர தாமதமானதால், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜாவின் கூலிப்படையை அணுகியதைத் தொடர்ந்து, நடுரோட்டில் சோமசுந்தரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், ரவுடி கட்டைராஜா, செந்தில்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிலோன் மோகன் தான், பணம் கொடுத்து ரியல் எஸ்டேட் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்ய தூண்டியவர் என தெரிந்தது. முக்கிய குற்றவாளியான மோகன் மில் உரிமையாளர். உடுமலை அருகே குடிமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று, தஞ்சையில் இருந்து வரவழைக்கபப்பட்ட கட்டை ராஜா தலைமையிலான கூலிப்படை இவரது மில்லில் தங்க வைக்கப்பட்டனர். அதிகாலையில் புறப்பட்டு சிங்காநல்லூர் வந்து சேர்ந்தனர். ரவுடிகள் வந்த வாகனத்தை மோகன் தான் ஓட்டியுள்ளார். கொலை நடந்த பகுதிக்கு வந்ததும், சோமசுந்தரத்தை கொலையாளிகளிடம் இவர் தான் அடையாளம் காட்டியுள்ளார். போலீசார் தேடுவதை அறிந்த மோகன், தனது ஸ்கார்பியோ காரில் சென்னை சென்று விட்டார். தனிப்படை போலீசார் சென்னை விரைந்து, மோகனை தேடுகின்றனர்.