/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தனியார் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பு பஞ்சு சேதம்தனியார் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பு பஞ்சு சேதம்
தனியார் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பு பஞ்சு சேதம்
தனியார் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பு பஞ்சு சேதம்
தனியார் மில்லில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பு பஞ்சு சேதம்
ADDED : ஆக 11, 2011 03:58 AM
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தனியார் காட்டன் மில்லில் ஏற்பட்ட தீ
விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து
சேதமடைந்தது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாகம்மை காட்டன்
மில்ஸ் என்ற தனியார் பஞ்சாலை உள்ளது. நேற்று பகல் 12.45 மணியளவில்
மின்கசிவு ஏற்பட்டு பஞ்சு புளோயர் குடோனில் திடீரென தீ பிடித்தது. சைரன்
மூலம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.விழுப்புரம் தீயணைப்பு
நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை
அணைத்தனர். இதற்கிடையே விக்கிரவாண்டி போலீசார், தொழிலாளர்கள் உதவியுடன் தீ
பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் பஞ்சு எரிந்து
சாம்பலானது. குடோனில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு
அப்புறப்படுத்தப்பட்டது என்று ஆலை நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது.
விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.