/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் இந்தியன் வங்கி விவசாயிகளுக்கு மானிய கடனுதவிதிருக்கோவிலூர் இந்தியன் வங்கி விவசாயிகளுக்கு மானிய கடனுதவி
திருக்கோவிலூர் இந்தியன் வங்கி விவசாயிகளுக்கு மானிய கடனுதவி
திருக்கோவிலூர் இந்தியன் வங்கி விவசாயிகளுக்கு மானிய கடனுதவி
திருக்கோவிலூர் இந்தியன் வங்கி விவசாயிகளுக்கு மானிய கடனுதவி
ADDED : ஆக 02, 2011 01:01 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் இந்தியன் வங்கி கிளை சார்பில் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
திருக்கோவிலூர் இந்தியன் வங்கி கிளை சார்பில் லட்சுமி பாலாஜி திருமண
மண்டபத்தில் விவசாயக் கடன் வழங்கும் விழா நடந்தது. காசாளர்
அனந்தகிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கிளை மேலாளர் சாம்ராட்சிங்தாக்குர்
முன்னிலை வகித்தார். வங்கியின் பொது மேலாளர் உலகன் தலைமை தாங்கி
விவசாயிகளுக்கான மானிய கடன் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறி 446
விவசாயிகளுக்கு விவசாய பயிர்க்கடன், மத்தியகால கடன்களை வழங்கினார்.
புதுச்சேரி முதுநிலை மேலாளர் மனோகரன், முன்னோடி மாவட்ட மேலாளர் சண்முகநாதன்
சிறப்புரையாற்றினர். சங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மதராஸ்
சர்க்கரை ஆலை அதிகாரிகள் கலந்து கொண்டு கரும்பு சாகுபடி, அதற்கான கடன்
திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினர்.திருக்கோவிலூர், திருநாவலூர்,
திருவெண்ணெய்நல்லூர், சேந்தநாடு, டி.புதுப்பாளையம், கண்டாச்சிபுரம்
உள்ளிட்ட இந்தியன் வங்கி கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி
அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் கிளை மேலாளர்
மணிக்குமார், களஅலுவலர்கள் சுஷாந்த், கவுதமன் மற்றும் வங்கி ஊழியர்கள்
விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். செல்வகுமார் நன்றி கூறினார்.