பிரதமருக்கும் - சிதம்பரத்திற்கும் அடுத்தக்குறி: பார்லி.,யில் விவாதம் நடத்த பா.ஜ., போர்க்கொடி
பிரதமருக்கும் - சிதம்பரத்திற்கும் அடுத்தக்குறி: பார்லி.,யில் விவாதம் நடத்த பா.ஜ., போர்க்கொடி
பிரதமருக்கும் - சிதம்பரத்திற்கும் அடுத்தக்குறி: பார்லி.,யில் விவாதம் நடத்த பா.ஜ., போர்க்கொடி

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரமருக்கு அனைத்தும் தெரியும், இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும்,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் பார்லிமென்டில் விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ., கோரியுள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவத்கர் இது குறித்து கூறுகையில்; ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கும். சிதம்பரத்திற்கும் சம அளவில் பங்கு உள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவகத்தில் இருந்து வெளியான விளக்க கடிதம் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். பிரதமர் மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் எங்களின் முக்கியக்குறியாக உள்ளது. இவர்களது ராஜினாமா குறித்து பார்லி., கூட்டத்தொடர் முடியும் வரை வலியுறுத்துவோம் என்றார் ஒரு பா.ஜ., மூத்த பிரமுகர்.
இரங்கலுடன் போலக்சபா ஒத்திவைப்பு : பல்வேறு பிரச்னைகள் மத்தியில் இன்று துவங்கிய பார்லி., கூட்டத்தொடர் 2 நிமிட மவுன அஞ்சலியுடன் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு பார்லி., நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் நாளை ( செவ்வாய்க்கிழமை) துவங்குகிறது. முன்னதாக புதிய அமைச்சர்களை பிரதமர் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆளும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கையிலெடுத்து போர்க்கணைகள், மற்றும் கேள்வி அம்புகளை விடத்தயாராக இருந்து வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் மறைந்த எம்.பி.,க்க்ள் பஜன்லால், சதுர்னன்மிஷ்ரா, தர்மாபிக்ஷா, பாட்சாடிக்கால், ஸ்ரீபால்சிங் யாதவ், எல்.எஸ்.,தர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மறைந்த உறுப்பினருக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து சமீபத்திய ரயில் விபத்துக்களி்ல் பலியானோர், மும்பை, நார்வே தாக்குதலில் பலியானோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராசா வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப, சிதம்பரம் பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள் மற்றும் அ.தி.மு.க ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரி வருகின்றனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என ராஜ்யசபாவில் நோட்டீஸ் வழங்கியுள்ளன . மேலும் விலைவாசி உயர்வு, ஆதர்ஷ் குடியிருப்பில் மத்திய அமைச்சரின் பங்குகள், மதக்கலவர வன்முறை தடுப்பு மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப முயற்சித்து செய்து வருகிறது.
இன்று லோக்சபாவில் இரங்கல் தீர்மானத்துடன் முடிந்ததும் எதிர்கட்சிகள் அமைதியாக கிளம்பி சென்றன. நாளை கடும் அமளி எதிர்பார்க்கலாம். ராஜ்யசபா 40 நிமிடங்கள் நடந்தது. ஸ்பெக்ட்ரம விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் குரல் எழுப்பின. தொடர்ந்து அமளி நிலவியதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத்தலைவர் அமீதுஅன்சாரி அறிவித்தார். அவை மீண்டும் கூடியதும் ஊழல் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பார்லி.,க்கு வந்த பிரதமர் இந்த கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை சமாளிக்க ஒத்துழைப்பு தர வேண்டும். எந்தவொரு பிரச்னையானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்றார். நேற்று இவர் கூறுகையில் பல்வேறு முக்கிய மசோதாக்ககள் நிறைவேற்றப்படவிருப்பதால் அரசின் அங்கமான பார்லி.,யை செயல்பட அனுமதிக்க வேண்டும் இதுதான் ஆரோக்கியமானது என்றுகூறியிருந்தார்.
பா.ஜ., இன்று மதியம் அவசர கூட்டம்: அவையில் நாளை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பா.ஜ., உயர்மட்டக்குழு பார்லி.,யில் உள்ள அலுவலகத்தில் கூடி வவிவாதிக்கப்பட்டது.
செப்டம்பர் 8ம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த அவையின் முதல்நாள் முடிந்தது. கடந்த கால கூட்டத்தொடர் முழுவதும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.