Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கல்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கல்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கல்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கல்

ADDED : ஜூலை 29, 2011 11:43 PM


Google News

திருச்சி திருச்சி பி.எஸ்.

என்.எல்., முதன்மை பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி, கரூர் , புதுகோட்டை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள பெரிய டெலிஃபோன் நிலையங்கள், வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிப்பட்ட விற்பனை நிலையங்களில் மொபைல் மேளாக்களை நடத்த உள்ளது.



இந்த மேளாக்களில் விண்ணப்பதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புள்ள நேசம் சிம்கார்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அதோடு 29 ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் சிம்கார்டுடன் இலவசமாக வழங்கப்படும். இதனுடன் 50 நிமிடங்களுக்கான இலவச டாக்டைம் கிடைக்கும்.நேசம் திட்டத்தை உபயோகிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஐந்து தரைவழி, வில் அல்லது செல்போன் இணைப்புகளுக்கு ஃப்ரெண்ட்ஸ் அண்டு ஃபேமிலி திட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் பேசலாம். பி.எஸ்.என்.எல்., எண்களுக்கு பேச நிமிடத்திற்கு 10 பைசா ஆகவும், தனியார் எண்களுக்கு பேச 30 பைசாவாகவும் கட்டணம் வசூல் செய்யப்படும்.இந்த ஐந்து எண்களில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய போதெல்லாம் ஐந்து ரூபாய் கட்டணத்தில் தாங்களாகவே மாற்றிக் கொள்ளலாம்.பிற அழைப்புகளுக்கான உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.,கட்டணம் பி.எஸ்.என்.எல்., எண்களுக்கு ஒரு பைசாவாகவும், தனியார் நிறுவனங்களுக்கு நொடிக்கு 12 பைசாவாகவும் கணக்கிடப்படும்.நேசம் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 200 எஸ்.எம்.எஸ்., அனுப்பி கொள்ளலாம். இதுபற்றிய விபரங்களை 1500 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us