/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்
கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்
கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்
கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 28, 2011 01:02 AM
திருப்பூர் : திருப்பூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த இரு ஊழியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மது விற்பதாக, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் செல்வம் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது; குறிப்பிட்ட மதுக்கடைகளில் நேற்று மாலை 'ரெய்டு' நடத்தினார். பெரியார் காலனியில் உள்ள மதுக்கடையில் (எண்:2001), கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியந்தது. கடை விற்பனையாளர் முருகேசன், பார் உதவியாளர் வெள்ளைசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 'டாஸ்மாக்' மேலாளர் கூறுகையில், ''கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


