/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவைகிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் அவலம் : செயல் வடிவம் பெற நடவடிக்கை தேவை
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டம் சர்வே பணியோடு முடங்கி கிடக்கிறது.
திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த, 77 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வேயும் எடுக்கப்பட்டது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் வழியாகவும், விளைநிலங்கள் பாதிக்காத வகையிலும் ரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிலம் கையகப்படுத்த இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வே பணியுடன், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்று இருந்தால், புதுச்சேரி, திண்டிவனம், கடலூர் ஆகிய நகரங்களின் போக்குவரத்து பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும். புதுச்சேரிக்கு விழுப்புரத்தில் இருந்து மட்டுமே ரயில் பாதை இணைப்பு உள்ளது. எனவே, எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் விழுப்புரம் சென்று அருங்கிருந்தே ரயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால், கடலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் இணைப்பு கிடைத்திருக்கும். மேலும், வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் நின்று செல்லும் முக்கிய நிறுத்தமாக புதுச்சேரி ரயில் நிலையம் உருவெடுத்து இருக்கும். இது, புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திருக்கும் என்பது நிச்சயம். இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றிருந்தால், திண்டிவனம், கடலூர் சாலைகளில் விபத்துகளின் எண்ணிக்கையும், நெரிசலும் பெருமளவில் குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கக் கூடிய இந்த ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி அரசும் அக்கறை காட்டவில்லை. எம்.பி.,யாக இருந்தவர்களும் ஆர்வம் காண்பிக்கவில்லை. சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 525 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தருமாறு பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் - புதுச்சேரி - கடலூர் ரயில்வே திட்டத்துக்கும் உயிர் கொடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.