ADDED : அக் 13, 2011 10:13 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 19 பாம்புகளை பிடித்தவர்கள், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ரோட்டில் பரமக்குடியை சேர்ந்த ராஜூ, மானாமதுரை மதுரைவீரன், தேவராஜ் மூவரும் சாக்கு மூடையை தூக்கி சென்றனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த 'புளு கிராஸ்' அமைப்பு நிர்வாகி பனிமா தலைமையிலான குழுவினர், விசாரித்தனர். மூடையில் 14 நல்ல பாம்பு, 5 சாரை பாம்புகள் இருந்தன. ரயில்வே காலனியில் பாம்புகளை பிடித்ததாக கூறினர். மூவரும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.


